தெலுங்கு பக்கம் செல்லும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை..! 

 
2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் இந்த தொடர் 260 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களுடன் திருமணம் நடக்கிறது. இப்போதைக்கு இரண்டு ஜோடிகளின் திருமணம் முடிந்துள்ளது

தற்போது இந்த தொடரில் மஹா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அக்ஷயா குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது இவர் இன்னொரு புதிய தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில் Kantara என பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.