வெற்றிமாறனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் அமீர்..!

 

சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட தன்னுடைய படைப்பு மூலமாக கவனமீர்த்த இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். வடசென்னை படத்துக்கு பிறகு சூரி நடித்து வரும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதனுடைய படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இதற்கான ஷூட்டிங் பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் இயக்குநர் அமீர். அந்த படத்தை வாடிவாசல் படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.