மனைவி ஐஸ்வர்யா ராயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அபிஷேக் பச்சன்..!!

ஐஃபா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபிஷேக் பச்சன், தனது மனைவி ஐஸ்வர்யா ராயை தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியது போல பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.
 
 

பாலிவுட் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு ஆண்டுதோறும் ’ஐஃபா’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான வருடம் தவறாமல் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் இம்முறை நிகழ்ச்சியை தனது கணவர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது தெரிந்தும், ஐஸ்வர்யா ராய் நிகழ்வுக்கு போகவில்லை.

அதற்கு காரணம் மகள் ஆராத்யா பச்சன் தான். அவருக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்லது. அதற்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஐஸ்வர்யா ராய் அபுதாபியில் நடைபெற்ற ஐஃபா விருதுகள் வழங்கும் விழாவுக்கு போகவில்லை.

எனினும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. அபிஷேக் பச்சனும், விக்கி கவுஷலும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினர். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அபிஷேக் பச்சனிடம் மனைவி ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது எது? என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா நடித்ததில் எனக்கு பிடித்தது பொன்னியின் செல்வன் 2 தான். பல்வேறு லேயர்கள் கொண்ட கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்திருந்தார். அந்த படத்தில் அவர் நடித்தத்தை கண்டு நான் பெருமை அடைகிறேன் என்று கூறினார்.

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக துவங்கி நடந்தது முடிந்தது. அதிக் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது குறித்து மிகவும் பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.