எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்லிய நடிகர் அஜித்..!!

 

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் கடந்த 24-ம் தேதி காலமானர். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினார்.  இந்நிலையில் தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி நேற்று  (மார்ச்-30) ஆறுதல் கூறினார்.

அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.