சீறி பாய்ந்த நடிகர் அஜித்..! 234 கி.மீ. வேகத்தில் காரில் பறந்த நடிகர் அஜித்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் கார் பைக் மீது அதிக பிரியம் கொண்டவர். அடிக்கடி கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக இருப்பார். தற்போது பைக் டூரிங்கிற்காக தனியாக ஒரு நிறுவனமே நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்திற்குச் செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே வீடியோவில் கார் செல்லும் வேகத்தை நோட் செய்யச் சொல்கின்றார். மேலும் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த வீடியோ இந்தியாவில் எடுத்தது அல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.காரணம் அஜித்குமார் காரின் இடது பக்கத்தில் அமர்ந்து காரினை இயக்குகின்றார். இந்தியாவில் காரின் இடது புறத்தில் ஸ்டேரிங் இருக்கும் கார்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. எனவே இந்த வீடியோ அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றபோதுதான் எடுக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.