#BREAKING : நடிகர் அஜித் வீட்டில் சோகம் - திரையுலகினர் அஞ்சலி..!!
தமிழ் சினிமாவின் முதன்மை நடிகராக இருக்கும் அஜித் குமாரின் தந்தை பி. சுப்பிரமணியம், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நிலை சரியிலாமல் இருந்தார். வயது மூப்பின் காரணமாக அவருடை உடல்நிலை பாதித்தது. மேலும், அதற்காக தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் பி. சுப்பிரமணியம் காலமானார். அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த பி. சுப்பிரமணியத்துக்கு அஜித்துடன் சேர்ந்து 3 மகன்கள் உள்ளனர்.
தற்போது நடிகர் அஜித் குடும்பத்தினருடன் சேர்ந்து உலக சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு தந்தை இறந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனினும் தந்தை சுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகளில் அஜித் குமார் உள்ளிட்ட, அவருடைய குடும்பத்தினரால் பங்கேற்க முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.