வீடு திரும்பினார் பாலா- ரசிகர்களுக்கு நன்றி..!!
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா, தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மைக் காலமாக அவர் நிறைய மலையாளப் படங்களில் நடித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலாவுக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் பாலாவின் கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட பாலா அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அது வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது அவர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர், தான் உடல்நலம் பெற்றதற்கு ரசிகர்களின் பிரார்த்தனை தான் காரணம். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் குணமடைய காரணமாக இருந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்று பாலா தெரிவித்துள்ளார்.