நடிகர் பாலா கண்ணீர் வீடியோ!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 

2003-ம் ஆண்டு வெளியான ‘அன்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவரால் நிலைக்க முடியவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் குவிந்தன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்ந நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் பாலா. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2012-ம் ஆண்டு அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாலா அனுமதிக்கப்பட்டார். தம்பியைக் காண இயக்குநர் சிறுத்தை சிவா மருத்துவனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் நடிகர் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

அதில், தனது மனைவியுடன் திருமண நாளைக் கொண்டாடிய அவர், பின் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தனக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடைபெறுவிருப்பதாகவும் மரணம் கூட நேரலாம் என்றும் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, நான் மருத்துவமனையில் இருக்கிறேன். உங்கள் அனைவரது பிரார்த்தனையால் இந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் அனைவரது பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

allowfullscreen

நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது இரண்டாவது ஆண்டு திருமண நாள். என் மனைவி எலிசபெத் இந்த நாளைக் கொண்டாட விரும்பினார். பிறப்போ, இறப்போ கடவுள் முடிவெடுப்பார் என்றார். பின்னர் தன் மனைவியைப் பார்த்து, எனக்கு ஏதாவது நேர்ந்தால் நீ நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே. டாக்டரை திருமணம் செய்துகொள் என்றார்.