12 வயதில் மகன் இருக்கும் நிலையில் மீண்டும் தாய்மை அடைந்த பிரபல நடிகை..!!

பன்னிரெண்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் பிரபல சீரியல் நடிகை இரண்டாவது தாய்மை அடைந்துள்ளதற்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
 

முன்னணி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸராக அறிமுகமான இவர், சீரியல் நடிப்பிலும் முத்திரை பதித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் காயத்ரிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். அதுவும் இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. சின்னத்திரை தொடர்கள் மட்டுமின்றி மிஸ்டர் அண்டு மிஸஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

சீரியல் உலகில் காயத்ரி மற்றும் அவரது கணவருக்கு பெரும் ரசிகர் வட்டம் உண்டு. இவர்களுக்கு 12 வயது மகன் இருக்கும் நிலையில், நடிகை காயத்ரி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் காயத்ரி யுவராஜ், புகைப்படத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து காயத்ரி மற்றும் யுவராஜ் தம்பதிக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.