நடிகர் கலையரசன் கண்டனம்! ரசிகர்கள் விமர்சனம்...!

 

நடிகர் கலையரசன் பிரபல யூடுபர் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் " ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை! முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என கலையரசன் டுவிட் செய்துள்ளார். 

ப்ளூ சட்டை மாறன் மாறன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் வெளியான  அமரன் திரைப்படத்தினை விமர்சனம் செய்துள்ளார். அதை அவர் அருவெறுப்புடன் விமர்சனம் செய்துள்ளதாக குறிப்பிட்டே கலையரசன் டேக் செய்துள்ளார். இந்த போஸ்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கலையரசன் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.