நடிகர் மாதவன் தன் வாழ்வில் இந்த விதிகளை கட்டாயம் பின்பற்றுவாராம்..! 

 

நடிகர் மாதவன் முதன்முதலில் 1996ம் ஆண்டு ஒரு ஹிந்தி படத்தின் பாடலில் கேமியோ ரோல் செய்துதான் சினிமா துறையில் அறிமுகமானார். பின் 1997ம் ஆண்டு ஒரு ஆங்கில படத்தில் நடித்தார். இதனையடுத்து 2000ம் ஆண்டுதான் அவர் அலைபாயுதே என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை இன்றும் விரும்பும் ரசிகர்கள் ஏராளம்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மாதவன் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மற்ற மொழி படங்களில் நடிப்பதைவிட தமிழ் மொழியில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். என்னவளே, மின்னலே, டும் டும் டும், ரன், அன்பே சிவம் என இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட்டாகின. இதனைத்தொடர்ந்து அவர் ஏராளமான நல்ல படங்களைக் கொடுத்தார். ஹிந்தியிலும் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்த மாதவன், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வலம் வந்தார்.

இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம்தான் சைத்தான். ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்த படம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவர் கடைசியாக ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தில் நடித்தார்.

அந்தவகையில் மாதவன் தனது வாழ்க்கையில் பின்பற்றும் மூன்று விதிகள் என்று அவர் பகிர்ந்த விஷயங்களைப் பார்ப்போம். “முதல் விதி, தெரிஞ்சும் யாருடைய மனதையும் நோகடிக்காதீங்க. இரண்டாவது பண ரீதியாக யாரையும் ஏமாற்றாதீர்கள். மூன்றாவது பெரியவங்களோ, சிரியவங்களோ யாரா இருந்தாலும் முதல்ல அவங்கள மனுஷனா மதிங்க…” என்று தனது மூன்று விதிகளை கூறி, நம்மையும் பின்பற்ற சொல்லி அறிவுறுத்தினார்.

 நடிகர் மாதவன் இன்று வரை எந்த கரையும் படாத ஒரு நல்ல மனிதராகவே இருந்து வருகிறார். இதிலிருந்து தெரிகிறதே அவர் அந்த விதிகளை எப்படி பின்பற்றி வருகிறார் என்பது…