லியோ படமும் LCU தான்: உறுதி செய்த விக்ரமின் ஏஜெண்டு..!!

கைதி மற்றும் விக்ரம் படங்களில் நடித்த நரேன், விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இவருடைய காட்சிகள் தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. 
 

விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்  இயக்கி வரும் படம் லியோ. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், பிக்பாஸ் ஜனனி, பாபு ஆண்டனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதையடுத்து காஷ்மீரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் பணி முடிவடைந்தது, சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யூனிவெர்ஸுக்குள்-வருவதாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கைதி, விக்ரம் உள்ளிட்ட கதைகளின் இடைசெருகல்கள் மற்றும் அப்படத்தின் கதாபாத்திரங்கள் லியோ படத்திலும் ஆங்காங்கே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தான் லியோ படத்தில் இணைந்து நடித்து வருவதை நரேனும் தனது ட்வீட்டில் உறுதி செய்துள்ளார். லியோ படத்தில் நடித்து வருகிறேன் என்று கேப்ஷனில் பதிவு செய்துள்ளார். கைதி மற்றும் விக்ரம் படங்களில் ஏஜெண்டு பிஜோய் என்கிற கதாபாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார். இவர் தான் இரண்டு படங்களுக்குமான இணைப்பு பாலமாக இருந்தார்.