லியோ படத்தில் நாசரின் உறவுக்காரர்..?? யாரு தெரியுமா?

 
ஏற்கனவே லியோ படத்தில் மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நாசரின் சகோதரர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், நரேன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், மன்சூர் அலிகான், மிஷ்கின் என பலரும் நடித்து வருகின்றனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாள் என்பதால், லியோ படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் லியோ படத்தில் ஏற்கனவே பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ளது. இது இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

அதன்படி தற்போது புதிய வரவாக நடிகர் நாசரின் இளைய சகோதரர் ஜவஹர் லியோவில் இணைந்துள்ளார். அவருக்கு படத்தில் முக்கிய வேடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் லியோ படத்துக்கு பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.