இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

 

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள்  என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

எனது இனிய நண்பர்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்த நாளில் மனதார வாழ்த்துக்கிறேன். இவ்வாறு அந்த வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

<a href=https://youtube.com/embed/JcnMLgH8qxY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/JcnMLgH8qxY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">