மீண்டும் பெயரை மாற்றிய நடிகர் ரவி மோகன்..!
Jun 5, 2025, 07:05 IST
நடிகர் ரவி மோகன் தற்போது ஒரு படத்தில் தயாரிப்பாளர் ஆகவும் இன்னொரு படத்தினை இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தனது அப்பாவின் கம்பெனியான ஜெயம் கம்பெனியை இப்பொது ஜெயம் ஸ்டூடியோ என பெயர் மாற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஸ்டூடியோவின் சின்னத்தில் வீரத்தின் அடையாளமான சிங்கம் இருப்பதாகவும் இதனால் ஜெயம் சிம்மம் ராசியை சேர்ந்தவர் எனவும் ஒரு சில வதந்திகள் பரவியுள்ளன. மேலும் இதற்கான நோக்கம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.