இப்படிப்பட்டவரா ஆர்.கே. சுரேஷ்..? வலைவீசும் போலீஸ்..!!

தமிழகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷை விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

சென்னை அமைந்தகரை பகுதியில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு 25% முதல் 30% வரை கூடுதலாக வட்டி கிடைக்கும் என்று அறிவித்தது. அதை நம்பி லட்சக்கணக்கானோர் ஏராளமாக பணம் போட்டனர். 

இந்நிலையில் கடந்தாண்டு இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம், அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்மூலம் 98000 பேரிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆருத்ரா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பிரிவு காவல்துறை கூறியது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்ப்புடைய பல முக்கிய புள்ளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன்மூலம் நடிகரும், பாஜக கலைப்பிரிவு தலைவருமான ஆர்.கே. சுரேஷிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இவ்வழக்கில் தொடர்புடைய ரூஸோ என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை தப்ப வைக்க ஆர்.கே. சுரேஷ் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.