Thug Life படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் சிலம்பரசன்..!!

 

இந்திய சினிமாவில் இருக்கும் ஸ்டைலிஷான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு . இவரது நடிப்பில் தற்போது பல மாஸ் பட்ஜெட் படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனின் 234வது படமான Thug Life படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார் .

மணிரத்தினம் – கமல்ஹாசன் கூட்டணையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சிம்புவுடன் சேர்ந்து த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர் .

இந்நிலையில் நடிகர் சிம்பு இப்படத்தில் தனது படப்பிடிப்பு காட்சிகளை வெற்றிகரமாக முடித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சில புகைப்படங்களும் வெளியாகி தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.