நடிகர் சூரி-அ இது... ஆள் அடையாளம் தெரியாமல் மாஸ் ஹீரோவாக மாறிய சூரியின் போட்டோ..! 

 
 வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானார் நடிகர் சூரி. அதற்கு பிறகு பிரபல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருந்தார்.

இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் நாயகனாக தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய இவருக்கு, அதில் கிடைத்த வெற்றியினால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அதன்பின்பு தற்போது நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக வெளியான கருடன் திரைப்படம் அவரது புகழை இன்னும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. வசூலிலும் இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி USA இலிருந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ஹீரோவுக்கே டாப் கொடுப்பீங்க போல அவ்வளவு க்யூட்டா இருக்கீங்க எனக் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

நடிகர் சூரியின் இந்த அசுர வளர்ச்சி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதோடு, காமெடியன் என்றாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.