நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!

 

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விதிக்க தடைக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ள உயர்நீதிமன்றம் சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டியுள்ளது.

இங்கிலாந்தில் தயாரான ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் வாங்கிய போது, அதற்கான நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இவ்வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ள உயர்நீதிமன்றம், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியன், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.  தவிர, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் எனவும் விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.