நடிகர் விஜய் அரசியல் வருகை : பிரபல நடிகை விமர்சனம் ..!

 
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் இணையவுள்ள தளபதி விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் அண்ணாமலை, திமுகவின் உதயநிதி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி, தளபதி விஜய்யின் அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், காவி கொள்கை கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், ஜோசப் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேபோல் சிறுபான்மை மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சில விஷயங்களைப் பேசினார்.