மனைவியை விட்டு பிரிந்துவிட்டேன்- ரஜினி பட நடிகர் அறிவிப்பு..!!
தமிழில் ‘திமிரு’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் விநாயகன். அதையடுத்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், தனக்கும் தனது மனைவிக்கும் இடையேயான அனைத்துவிதமான திருமண உறவுகளும் முடிவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பிரிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஏற்கனவே நடிகர் விநாயகன் மீது பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. பொதுவெளியில் அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் சர்ச்சையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளரை அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அதை தொடர்ந்து எழுப்பபப்ட்ட புகாரில், விநாயகன் தனது நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தார்.