நேரம் படத்தில் நடித்த நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்..!

 

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சு குரியன். ஓம் ஷாந்தி ஓஷானா, பிரேமம், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழில், நேரம் படத்தில் அறிமுகமான அஞ்சு குரியன் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மேலும், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, பிரபு தேவாவுடன் வுல்ப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அஞ்சு குரியன் தன் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான இப்படங்களைப் பார்த்த அஞ்சு குரியனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர்.