ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணிந்த காரணத்துக்காக நடிகைக்கு 2 ஆண்டு சிறை..!

 

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணியாமல் சென்ற  காரணத்துக்காக ஈரானில் நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் வந்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவருக்கு 61 வயது ஆகிறது என்றும் அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் அவரது உறவினர்கள் வாதாடினர். இருந்த போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இருப்பினும் சிறையில் அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சை அளிக்க மட்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.