வைரலாகும் நடிகை காஜல் அகர்வாலின் லிப் லாக் புகைப்படம்..!

 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கர்பமடைந்ததால் நடிப்பதில் இருந்து சில காலம் பிரேக் எடுத்தார் . இதையடுத்து கர்ப்பகாலத்தில் பல விதமான போட்டோஷூட்களை நடத்தி இணையத்தை கலக்கினார்.இதையடுத்து அவருக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், அவருக்கு நீல் கிச்லு என பெயர் சூட்டி உள்ளனர் . இந்நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபாடு பிஸியாக உள்ளார் நடிகை காஜல் அகர்வால் .

இதற்கிடையில் 2024 புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடியுள்ள காஜல் அகர்வால் புத்தாண்டு பார்ட்டியில் அவரது கணவர் மற்றும் தோழிகள் உடன் கொண்டாடி உள்ளார்.அப்போது கணவர் உடன் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.