நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!
தென்னிந்திய திரையுலகில் இருக்கும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்திருந்தார் .
இதையடுத்து தற்போது சீயான் விக்ரமுடன் தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
பொதுவாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைப்பார் . அத்துடன் நேரம் கிடைக்கும் போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் வருவார்.
அந்தவகையில் நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு கேசுவலாக பதில்கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்
அதில் சில கேள்விகளின் பதில்கள் இதோ :
கவர்ச்சி உடைகளில் ஏன் அடிக்கடி போட்டோஷூட் எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு கிளாமர் பிடிக்கும் என்பதால் அதுபோன்ற உடைகளை அணிகிறேன்.
எனது திருமணம் பற்றிய கேள்விகள் வருகின்றன. அதைப் பார்ப்பதற்கு ஏன் இவ்வளவு அவசரம்? எதோ நடக்குமோ அது நிச்சயம் சரியான நேரத்தில் நாடாகும் .
என்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்காக சென்னையில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தலாமா என்ற எண்ணம் உள்ளது என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.