இம்யூன் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை மும்தாஜ்..!

 

குஷி படத்தில் விஜய் உடன் ரொமான்டிக் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார் மும்தாஜ். இந்த பாடல் இன்றளவில் மட்டும் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக காணப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கிளாமர் கேரக்டர்களில் நடிக்க மும்தாஜ்க்கு வாய்ப்புகள் குவிந்தது. குறுகிய காலத்திற்கு அசுர வளர்ச்சி கண்ட நடிகையாக மும்தாஜ் காணப்பட்டார். இவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

2009 ஆம் ஆண்டு வெளியான ராஜாதி ராஜா என்ற படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு சுமார் பத்து ஆண்டுகள் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்தார். மீண்டும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கம்பேக் கொடுத்தார்.

சமீபத்தில் மும்தாஜ் வழங்கிய பேட்டி ஒன்றில், உடம்பை அசைக்கவே முடியாத அளவுக்கு வலியை பல வருடங்களாக அனுபவித்ததாகவும் தனக்கு ஆட்டோ இம்யூன் என்கிற அரியவகை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தான் சினிமாவில் கவர்ச்சியாக நடித்ததை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டதாகவும் மனம் திறந்து பேசி இருந்தார்.

இந்த நிலையில், தனது திருமணம் தொடர்பில் பேட்டி அளித்த நடிகை மும்தாஜ், என்ன கல்யாணம் பண்ணனும் என்றால் அவர் டாக்டர் ஆக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், என்னை யார் கல்யாணம் பண்ணுவா? எவ்வளவோ அழகா இருந்தாலும் எனக்குள்ள ஒரு ராட்சசி இருக்கா.. என்ன மாதிரி நல்லவளும் இல்லை.. கெட்டவளும் இல்லை.. அதையும் மீறி என்ன கல்யாணம் பண்ணிக்கணும் என்றால் ஒரு சிறப்பான டாக்டராக இருக்க வேண்டும்.. அதற்கு காரணம் நான் ஒரு நோயாளி என்பது தான் என தெரிவித்துள்ளார்..