பிரபல ஹீரோயின் ஒலிவியா ஹஸ்ஸி காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 

அர்ஜென்டினாவில் பிறந்த நடிகை ஒலிவியா ஹஸ்சி, நேற்று காலமான செய்தி அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஒலிவியா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். 

"ஒலிவியா ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மா, அவரது அரவணைப்பு, ஞானம் மற்றும் உண்மையான இரக்கம் அவரை அறிந்த அனைவருக்கும் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றது" என்று அந்த இரங்கல் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

நடிகை ஒலிவியா ஹஸ்ஸிக்கு 2008ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 15 வயதில், ஒலிவியா ஹஸ்ஸி 16 வயதான பிரிட்டிஷ் நடிகர் லியோனார்ட் வைட்டிங்குடன் பிராங்கோ ஜெஃபிரெல்லியின் ரோமியோ ஜூலியட்டில் நாயகியாக நடித்திருந்தார். 

ஜெஃபிரெல்லி இணைந்து எழுதிய பாரமவுண்ட்-விநியோகத் திரைப்படம், சிறந்த படம் உட்பட நான்கு அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்றது. அவரது நடிப்பிற்காக ஹஸ்ஸிக்கு கோல்டன் குளோப் மற்றும் டேவிட் டி டொனாடெல்லோ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒலிவியா இத்தாலிய திரைப்படத் தயாரிப்பாளர் ஃபிராங்கோ ஜெஃபிரெல்லியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் 1977ம் ஆண்டு காவியமான ‘ஜீசஸ் ஆஃப் நாசரேத்’ படத்தில் மேரியாக நடித்திருந்தார். பின்னர் அவர் 2003ம் ஆண்டு வெளியான ‘அன்னை தெரசா ஆஃப் கல்கத்தா’ படத்தில் நாயகியாக அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார். 

ஏப்ரல் 17, 1951 அன்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்தார் ஒலிவியாவின் தந்தை  அர்ஜென்டினா ஓபரா பாடகர், ஓஸ்வால்டோ ரிபா என்ற மேடைப் பெயரில் பாடி வந்தார். அதே நேரத்தில் அவரது தாயார் ஜாய் சட்டத்துறை செயலாளராக இருந்து வந்தார். நடிகை ஒலிவியாவின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.