அனிமல் படத்தை மறைமுகமாக தாக்கிய நடிகை ராதிகா!

 

தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா.. நடிப்பதோடு மட்டுமல்லாமல், படங்களையும் தயாரித்த ராதிகா சின்னத்திரையிலும் கால் பதித்தார்.

சின்னத்திரையில், 1994ம் தொடங்கிய தன்னுடைய ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவை மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனிடையே குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த அவர், அதிலும் தன்னுடைய முத்திரையை பதித்தார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.



அந்த பதிவில் , “ஒரு படம் பார்க்கிற போது யாருக்காவது கிரிஞ்சா தோணியிருக்கா.. இந்தப் படத்தை பார்க்கிற போது வாமிட் வருகிற அளவு கோபம் வருகிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவை பார்த்த ரசிகர்கள், இவர் நேற்று நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான அனிமல் படத்தைதான் சொல்கிறார் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இவர் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை குறிப்பிடுகிறார் என்று கூறி வருகின்றனர்.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அனிமல். அர்ஜூன் ரெட்டி புகழ் இயக்குநர். சந்தீப் ரெட்டி வங்கா இந்தப்படத்தை இயக்கி இருந்தார். இந்தப்படத்தில் சில குறிப்பிட்ட காட்சிகளில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாகச் சொல்லி, பலரும் இந்தப்படத்தை விமர்சனம் செய்தனர். அந்த வரிசையில் இந்தப்படத்தை தற்போது நடிகை ராதிகாவும் சாடியிருப்பதாக சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது.