இந்தியில் கஜோல் உடன் கைக்கோர்க்கும் நடிகை ரேவதி..!
Oct 8, 2021, 17:05 IST
நடிகை ரேவதி ஐந்தாவது முறையாக இயக்கும் படத்தில் கஜோல் கதாநாயகியாக நடிக்கும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ரேவதி இதுவரை 4 படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒரு படம் ஆங்கிலம் மற்றும் மலையாளத்திலும், மற்ற இரண்டு படங்களும் இந்தியிலும் வெளியான.
தற்போது இவர் ஐந்தாவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படமும் இந்தியில் தான் தயாராகிறது. கதாநாயகியாக கஜோல் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூகவலைதளத்தில் ரேவதி வெளியிட்டுள்ளார்.
A post shared by Revathy Asha Kelunni (@revathyasha)
இந்த படத்துக்கு ‘தி லாஸ்ட் ஹுர்ரே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தையும், அதில் சம்மந்தப்பட்ட உண்மையான கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.