சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுக்கப்போவதாக நடிகை சமந்தா அறிவிப்பு..!! 

 

தென்னிந்திய நடிகைகளுள் புகழ்பெற்றவராக இருப்பவர் சமந்தா. ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரின் ‘சகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடர் ஆகிய இரண்டிலும் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். 

இதற்கிடையே கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சினிமாவில் இருந்து சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பிய சமந்தா, சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

அதில்  நான் கடுமையாக உழைப்பதன் மூலம் வெற்றி பெறுகிறேன். சம்பள விஷயத்தில் தயாரிப்பாளர்களை நான் நிர்பந்திப்பது கிடையாது. அவர்கள் கொடுப்பதை பெற்றுக் கொள்கிறேன். சம்பளத்திற்காக தயாரிப்பாளர்களிடம் கெஞ்சுவது கிடையாது. உடல் நிலை பாதிக்கப்பட்ட போது சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானேன். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வர போராடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். 

இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில் குஷி மற்றும் சிட்டாடல் ஆகிய படங்களை முடித்துவிட்டு என் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவேன். அதற்காக சில காலம் ஓய்வு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.