சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நடிகை சமந்தா..! 

 

 கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்த நிலையில் இருந்த நடிகை சமந்தா தற்போது சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடிகை சமந்தா தற்போது ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் முழு உடல் தகுதியுடன் உற்சாகமாக மீண்டும் சென்னை திரும்பிய சமந்தா சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு திடீரென விசிட் அடித்தார். அவரது வருகை பார்த்து இரு பக்கமும் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாகமாக கைதட்டி வரவேற்பு அளித்தனர். இது குறித்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் 10 லட்சம் லைக் குவிந்துள்ளது. பாடகி சின்மயி உள்பட பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை தந்த போது அவர் அணிந்திருந்த வித்தியாசமான டிசைனில் உள்ள உடை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.