ஷில்பா ஷெட்டி வீட்டில் நடந்த விபரீதம்- கதறும் நடிகை..!!
 

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை வீட்டில் பல விலை உயர்ந்த பொருட்கள் திருடுபோயுள்ளதாகக் கூறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

கர்நாடகாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டி, இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மிஸ்டர். ரோமியோ’ படத்தில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒளிபரப்பான பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் அவருக்கு உலகளவில் புகழ் கிடைத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரான சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்தார்.

பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டு மும்பையில் வசித்து வரும் ஷில்பாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது அவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

முன்னணி பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் இந்த தொடர், விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளிவரவுள்ளது. தற்போது ஷில்பா தனது குடும்பத்தினருடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மும்பை போலீஸில் ஒரு புகார் தெரிவித்துள்ளார்.

அதில், மும்பை ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது வீட்டில் சில விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து போலீசார் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இதன்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள காவல்துறை, தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.