நடிகை த்ரிஷா பகிர்ந்த துயரச் செய்தி..!

 

நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பதிவில், “என் மகன் ஸோரோவின் உயிர், கிறிஸ்துமஸ் தினத்தின் காலைப் பொழுதில் பிரிந்தது. இனி என் அன்றாட வாழ்க்கை ஒரு துளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு அறிவார்கள்.

நானும், என் குடும்பத்தினரும் உடைந்துவிட்டோம். அதிர்ச்சியில் இருக்கிறோம். எனவே, சிறிது காலம் விடுப்பு எடுத்துக்கொள்ள இருக்கிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வரும் த்ரிஷா எப்போதுமே விலங்குகள் மீது மிகவும் ப்ரியம் கொண்டவர்கள். விலங்குகள் நல ஆர்வலராகவும் செயல்படுபவர். அவர் தனது வளர்ப்பு நாயை இழந்துள்ளதன் துயரத்தை புரிந்துகொண்டு ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.

தற்போது நடிகர் அஜித் உடன் ‘விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். அப்படம், பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.