வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய நடிகை த்ரிஷா..!
தமிழ் சினிமாவில் 90-ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இன்று வரை வலம் வருவது தான் மெளனம் பேசியதே திரைப்படம். கடந்த 2002 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான இப்படம் திரையரங்குகளில் அப்போதே சக்கை போடு போட்டது.
இயக்குனர் அமீர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க நந்தா , லைலா , த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்திருப்பர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த இப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் மனதார நன்றி தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா.
இதற்கு முன் இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ள நிலையில் தற்போது நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.