கடைசியாக வழிக்கு வந்த த்ரிஷா- மகிழ்ச்சி அடைந்த அஜித் படக்குழு..!!

அஜித் நடிப்பில் விரைவில் உருவாகவிருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

பொன்னியின் செல்வன் பட வெற்றியை தொடர்ந்து லைகா நிறுவனம் அடுத்து கையில் எடுத்துள்ள பெரிய பட்ஜெட் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் இம்மாத இறுதிக்குள் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதற்கிடையில் படத்துக்கான மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நடிகர் நடிகர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளன. 

ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வந்தது. அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தபோது, விடாமுயற்சி பட வாய்ப்பை த்ரிஷா மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரிடம் படக்குழு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அதன்பலனாக அவர் விடாமுயற்சி படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அஜித்தின் மனைவியாக அவர் இந்த படத்தில் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளிநாட்டில் இருக்கும் அஜித் இந்தியா திரும்பியது, விடாமுயற்சி படம் தொடர்பான வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.