நடிகை விந்தியாவின் கருப்பு பக்கங்கள்! கைகொடுத்த ஜெயலலிதா..!

 

சங்கமம் படத்தில் ரகுமான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார், ஸ்ரீவித்யா, வடிவேலு, ராதா ரவி என பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். அவரின் இசையில் அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் இன்றளவிற்கும் அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை விந்தியாவிற்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இவர் நடிகை என்பதையும் தாண்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளார். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிதாக ஆசைப்படவில்லை. அம்மா சொன்னார்கள் அதற்காக நடித்தேன். நான் சங்கமம் படத்திற்காக முதன் முதலில் வாங்கிய சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். அதை என் அம்மாவிடம் தான் கொடுத்தேன். அதன் பிறகு அடுத்தடுத்த படத்தில் நடித்தேன்.

2008ம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு வந்தது. வாழ்க்கையிலேயே ரொம்ப மோசமான கருப்பு நாட்கள் என்று அந்த நாட்களை சொல்லலாம். ரொம்ப குண்டாகிவிட்டேன், இதனால் இனிமே நமக்கு வாழ்க்கை இல்லை, 17 வயதிலேயே சினிமவந்ததால் படிப்பும் இல்லை.

அப்போது தான் அரசியலுக்கு வந்தேன். ஆனால், எனக்கு பேசத்தெரியாது, மற்ற நடிகைகளைப் போல நானும் இரண்டு விரல்களை காட்டி பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது தான் ஜெயலலிதா அம்மா என்னை அழைத்துபேசி என்னால எல்லாம் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொடுத்தார்கள். இதனால், என் அம்மாவிற்கு மேல நான் அவர்களை உயிராக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.