22 வருட சினிமா அனுபவத்தில் புதுத்திருப்பம்..! இரட்டை வேடத்தில் மிரட்ட வரும் அல்லு அர்ஜூன்...!

 

 22 வருடங்களாக சினிமாவில் சாதித்து வரும் அல்லு அர்ஜுன் தற்போது இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லுஅர்ஜூன் இதுவரை எந்த இயக்குநருடனும் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அட்லி இயக்கும் இப்புதிய படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கப் போவது, ரசிகர்களிடம் புதிய அனுபவத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அல்லு அர்ஜுன், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கின்றேன். இந்தக் கதையை நான் கேட்கும் போது, ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அட்லி சொன்ன கதையில் ஓர் உண்மைத் தன்மை இருக்குது,” எனக் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படம், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மாஸ் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.