சமந்தாவை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை..!

 

நெபுலைசர் என்ற மருத்துவ சிகிச்சை குறித்து கூறி சிக்கலில் மாட்டிக் கொண்டார் நடிகை சமந்தா என்பதும் அவரை ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ் என்பவர்  படுமோசமாக விமர்சனம் செய்து சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் சமந்தா நீண்ட விளக்கம் அளித்தார் என்பதும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் பகிர்ந்து கொண்டேன் என்று கூறினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சமந்தாவை அடுத்து அதே ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ் என்பவரிடம் நயன்தாரா சிக்கலில் மாட்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் செம்பருத்தி டீ குடித்தால் உடலுக்கு நல்லது என்றும் செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது என்றும் பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து சமந்தாவை உலுக்கி எடுத்த அதே டாக்டர் ஆபி பிலிப்ஸ் 'செம்பருத்தி டீ சுவையானது என்று சொன்னால் மட்டும் போதும், செம்பருத்தி டீ சர்க்கரை நோயை குணப்படுத்தும் என்று சொல்வதற்கு நயன்தாரா யார்? அவர் என்ன மருத்துவரா? என கொந்தளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போகிற போக்கை பார்த்தால் மருத்துவர்கள் தவிர வேறு யாருமே உடல்நலம் குறித்த பதிவுகளை செய்ய முடியாது போல் தெரிகிறது என இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

<a href=https://youtube.com/embed/eHMrZvib-y0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/eHMrZvib-y0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">