சூர்யாவை தொடர்ந்து கேரளாவிற்கு நிவாரண நிதியை வழங்கிய நயன்தாரா..! 

 

கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு நிறைய திரைப்பிரபலங்கள் நிதியை வழங்கியிருக்கும் நிலையில் நயன்தாரா, விக்னேஷ்சிவன் குடும்பத்தின் சார்பில் கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

ரௌடி பிக்சர்ஸின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் 'நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த பதிலைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.' என குறிப்பிட்டிருந்தனர்.

கேரளாவில் உள்ள வயநாட்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மிகவும் வருத்தமாக உள்ளது. மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் அனைவருக்கும் தலை வணங்குகிறோம். இந்த மோசமான சூழலில் எங்களால் முடிந்த இந்த உதவி செய்கிறோம் என பதிவிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவர்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக் பெயர்களும் அதில், இடம்பெற்றுள்ளன.