மூடப்படுகிறதா ‘ஆஹா’ ஓ.டி.டி தளம்..??
 

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவருடைய தந்தை அல்லு அரவிந்துக்கு சொந்தமான ‘ஆஹா’ ஓ.டி.டி தளம் தமிழ் மொழியில் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தெலுங்கு சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கீதா ஆர்ட்ஸ். இது நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்துக்கு சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஓ.டி.டி தளம் தான் ஆஹா. தெலுங்கு சினிமா மற்றும் வெப் சிரீஸுகளுக்கு வேண்டி பிரத்யேகமாக இயங்கி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் களமிறங்கியது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வருகிறது. மற்ற ஓ.டி.டி தளங்களை விட, ‘ஆஹா’வில் கட்டணம் குறைவு தான் என்றாலும், நல்ல படைப்புகள் எதுவும் இல்லை.

தமிழ் சினிமாவில் வெளியாகி தோல்வி அடைந்த படங்களை தான் ‘ஆஹா’ தளத்தில் காண முடிகிறது. அது தவிர தெலுங்கு அளவுக்கு தமிழில் இதற்கான ப்ரோமோஷன்கள் குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக பயனர்கள் வட்டத்தை அதிகரிக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் விரைவில் தமிழி மொழியில் மட்டும் தனது சேவையை நிறுத்திக் கொள்ள ஆஹா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தகுந்த பணியாளர்களை வேலைக்கு எடுக்கவில்லை, சிறப்பு கவனம் கொடுக்கவில்லை, ப்ரோமோஷனும் குறைவு தான் போன்ற காரணங்களாக் ஆஹா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.