ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் அப்டேட்..!!

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா‘, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்‘, ‘ரன் பேபி ரன்‘  என மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த நிலையில் அடுத்தபடியாக ‘லாக்கப்‘ படத்தை இயக்கிய சார்லஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘சொப்பன சுந்தரி‘ படம் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த ‘சொப்பன சுந்தரி‘ படம் திரில்லர் மற்றும் காமெடி கலந்த கதையில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் இவருடன் இணைந்து லட்சுமி பிரியா, சந்திர மவுலி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இப்படத்தின் வெளியிட்டு தேதியை இப்படக்குழு அறிவிக்க உள்ளது.