அஜித் ரசிகர்கள் கவலை..! படங்களில் இருந்து ஒரு வருடத்திற்கு ஓய்வு..?
நடிகர் அஜித்துக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்பட ரத்தக் கசிவு காரணமாகவே இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என தகவல்கள் வெளியானது. அதன் பின்பு அவர் நலமாக வீடு திரும்பி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், தற்போது அஜித் கைவசம் உள்ள இரண்டு திரைப்படங்களும் முடித்த பிறகு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளாராம்.
கடந்த மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக தான் இந்த சிகிச்சை நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே நடந்த சிகிச்சை அப்போதைய சூழ்நிலைக்கு சரி செய்துள்ளதாகவும் அது தற்போது முழுமையாக குணம் அடைய வேண்டும் என்றால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இன்றி குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த அஜித், அதற்குப் பிறகு ஒரு வருடம் ஓய்வு எடுக்கப் போவதாகவும் இதன் காரணத்தினால் படங்களில் நடிக்க மாட்டார் எனவும் கூறப்படுகின்றது. இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.