லியோ படத்திற்கு போட்டியாக ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கும் அஜித் பட இயக்குனர்..?

 

அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் ‘துணிவு‘. இப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமாரின் 62 வது படத்தை இயக்கப் போவது யார் என்று பல கேள்விகள் எழுந்துவந்தன.  இந்நிலையில் ஏகே 62 படத்தை ‘தடம், தடையறத் தாக்க‘ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சன் கதையில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

‘துணிவு‘ படத்தை போலவே ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கும் விஜய்யின் ‘லியோ‘ படத்தை போலவே ஆங்கிலத்தில் டைட்டில் வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் அஜித்தின் 62வது படத்திற்கு ‘டெவில்‘ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு மகிழ்திருமேனி தனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் லியோவுக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்பதால் அதே பாணியில் ஆங்கிலத்தில் ‘டெவில்‘ என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.