சம்பவம் லோடிங்...!! இன்று மாலை வெளியாகிறது AK 62 அப்டேட்..!!

நடிகர் அஜித்தின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகவுள்ள ஏ.கே 62 படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
 

நடப்பாண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து அவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும் இது அஜித்தின் 62-வது படம் என்பதால், படக்குழு இப்படத்தை AK62 என்று குறிப்பிட்டது.

ஆனால் விக்னேஷ் சிவன் எழுதிய கதையை அஜித்துக்கு பிடிக்கவில்லை, லைகா நிறுவனமும் விரும்பவில்லை. இதனால் அவரிடம் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் திரும்பப்பெறப்பட்டு, AK62 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேணிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இயக்குநர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 

பல மாதங்களாக அறிவிப்பு வெளியாகாமல் AK 62 படம் குறித்து சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது. நாளை  அஜித்தின் 52-வது பிறந்தநாள் என்பதால், அப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமாக லைகா வெளியிடும் என கூறப்படுகிறது.