அஜித்தின் பெர்சனல் பக்கங்கள்- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ஷாலினி..!!

கணவர் அஜித் குமார் தொடர்பான பெர்சனல் பக்கங்களை நடிகை ஷாலினி வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலை கிளப்பியுள்ளது.
 

நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் மனைவி அஜித் மற்றும் குழந்தைகளும் சுற்றுலா சென்றுள்ளனர். அவ்வப்போது அஜித் வெளியே சுற்றிப் பார்க்கும் புகைப்படங்களை மனைவி அஜித் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் அஜித் குமார் சுற்றுலா சென்ற நாட்டில் கார் ஓட்டிச் செல்லுகையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான “உயிரும் நீயே உடலும் நீயே” பாடலை கேட்டுக்கொண்டு வாகனத்தை ஓட்டியுள்ளார். அதை வீடியோ எடுத்த மனைவி ஷாலினி, ”கணவர் அஜித்தின் ஆல்டைம் ஃபேவரைட் பாடல்” என்கிற கேப்ஷனுடன் தனது இஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.