வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அவரது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.
அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தில் முதன்மை நாயகியாக த்ரிஷாவும் இரண்டாவது நாயகியாக தமன்னாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது போல் தற்போது நார்வேவில் இருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.