நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.என்னதான் OTTயில் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை தாறுமாறாக கொண்டாடி தீர்த்தனர்

இதன் காரணமாக இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்திற்கு ‘சர்ஃபிரா’ என பெயரிடப்பட்டுள்ளது . ‘சூரரைப் போற்று’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.சர்ஃபிரா படத்தின் புரமோஷன் பணிகளில் மிகவும் பிசியாக ஈடுப்பட்டு வந்த நடிகர் அக்‌ஷய் குமாருக்கு திடீரென உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது . இதையடுத்து பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது .

இதேபோல் கடந்த 2022-ம் ஆண்டு அக்‌ஷய் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.