ராட்ச்சன் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய் குமார்..!
 

 

இந்தியில் தயாராகும் ராட்ச்சன் படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாக அக்‌ஷய் குமார் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ராட்ச்சன். இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு கிரைம் த்ரில்லர் படங்களுக்கு புதிய பாணி உருவானது. அதை தொடர்ந்து தெலுங்கிலும் இதே பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள விபரம் தெரியவந்துள்ளது. கதாநாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அக்‌ஷய் குமார் நடிக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்படும் பெரும்பாலான படங்களில் அக்‌ஷய் குமார் நடிப்பது வழக்கம்.

அந்த டிரெண்டையே பின்பற்ற படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. முன்னதாக காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.