ஒட்டுமொத்த நம்பிக்கையும் போச்சு..! ப்ளூ சட்டை கிண்டல்

 

கோட் படத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் யுவன் சங்கர் ராஜா 3 பாடல்களை வெளியிட்டு முடித்துவிட்டார் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

அதாவது நேற்று முன்தினம்  கோட் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாட்டில் விஜய் ஒரு சில ஸ்டேப் மட்டுமே போட்டு இருந்தார். மீதியை போட்டோக்களை வைத்து எஸ்கேப் ஆகியிருந்தனர்.

டீ ஏஜிங் டெக்னாலஜி மூலம் விஜயை கொடூரமாக வெங்கட் பிரபு காட்டியுள்ளார். இந்த ஐடியாவே  முதலில் தவறு என்றும் அதில் விஜய்யை  பார்க்க சகிக்கவில்லை எனவும் ரசிகர்கள் பொங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் இயக்குனர்கள் இனிமேல் தன்னை வைத்து காமெடிதான் செய்யப் போகின்றார்கள் முன்பை போல தரமான படங்கள் தனக்கு வராது என்று நினைத்துவிட்ட காரணத்தினால்தான் விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியல் பக்கம் ஒதுங்க முடிவு செய்துவிட்டார் என்றும் கலாய்த்து வருகின்றார்கள்.

விஜய் நடித்த பிஸ்ட் படம் சர்வதேச அளவில் ட்ரோல் மெட்டீரியல் ஆக்கப்பட்டது. அதற்குப் பிறகு நடித்த வாரிசு  படமும் அவருக்கு விமர்சன ரீதியாக கை கொடுக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம்  லியோ திரைப்படம் ஓரளவு பரவாயில்லை என்றாலும் இரண்டாம் பாதியில் சொதப்பி விட்டது. தற்போது கோட் படம் சரி அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.