மனைவிக்கு தெரிந்தே பிரபல நடிகைக்கு கார் வாங்கி தந்த விஜய்..!! யார் அவர்..!!

அண்மைக் காலமாக நடிகர் விஜய்யை சுற்றி பல்வேறு பிரச்னைகள் உலா வருகிறது. அவர் தனது தாய்-தந்தை பிரிந்து சென்றுவிட்டார், மேலும் அவருடைய மனைவியும் விஜய்யை விட்டு பிரிந்துவிட்டார் போன்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.
 

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு தெரிந்தே, பிரபலமான நடிகை ஒருவருக்கு சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், பெருமளவில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது கிடையாது. ஆனால் சமீப காலமாக அவரைச் சுற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவர் தனது அம்மா- அப்பாவை பிரிந்துவிட்டார், விஜய் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சங்கீதா பிரிந்து வாழ்கிறார் என பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அவரை சுற்றி சொல்லப்படுகிறது.

புதியதாக நடிகர் விஜய் வளர்ந்து வரும் நடிகருடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் விஜய் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, அந்த நடிகையை திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது. விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தான்.

விரைவில் தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, விஜய் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளார் என்றும் சொல்லப்பட்டன. இந்நிலையில் அண்மையில் கீர்த்தி சுரேஷுக்கு வேண்டி நடிகர் விஜய் புதிய ரக சொகுசுக் காரை வாங்கி பரிசளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் விஜய் தனது மனைவிக்கு தெரிந்தே தான் அந்த காரை வாங்கி, கீர்த்திக்கு பரிசளித்துள்ளாராம்.